Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவசேனாவின் ஆட்சிக்கனவு கலைந்தது எப்படி? புதிய தகவல்கள்

சிவசேனாவின் ஆட்சிக்கனவு கலைந்தது எப்படி? புதிய தகவல்கள்
, செவ்வாய், 12 நவம்பர் 2019 (09:08 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தாங்கள் விரும்பவில்லை என பாஜக கைவிட்டதை அடுத்து, சிவசேனா கட்சிக்கு மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையின்படி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, மத்திய அமைச்சரவை பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தது
 
இதனால் சிவசேனாவின் ஆட்சிக்கு வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்கேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் கொடுத்த காலக்கெடுவுக்குள் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கடிதத்தை கொடுக்கவில்லை. இரு கட்சிகளும் தாங்கள் யோசித்துக் கொண்டிருப்பதாக சிவசேனாவுக்கு பதிலளித்தது
 
webdunia
இதனை அடுத்து சிவசேனா கட்சி தலைவர்கள் ஆளுநரிடம் சென்று தங்களுக்கு 48 மணி நேரம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அவகாசத்தை தர ஆளுநர் மறுத்துவிட்டதை அடுத்து சிவசேனாவின் ஆட்சி கனவு கலைந்தது. சிவசேனாவை எதிர்த்து இத்தனை ஆண்டுகாலம் அரசியல் செய்து விட்டு திடீரென அக்கட்சி ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தால் தங்கள் கட்சிகளின் இமேஜ் பாதிக்கும் என காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதை அடுத்தே சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பதில் இருந்து இரு கட்சிகளும் பின் வாங்கியதாகத் தெரிகிறது 
 
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் நேற்று இரவு அழைப்பு விடுத்தார் அதுமட்டுமின்றி இன்று இரவு 8.3 மணி வரை மட்டுமே தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் கெடு கொடுத்துள்ளார் இந்த கெடுவுக்குள் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்காததால், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு கொடுக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்படுவதால் மகாராஷ்டிரா மாநில மக்கள் இன்னொரு தேர்தலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றே கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனிமையை வீடியோ எடுத்த கணவன் – அதிர்ச்சியடைந்த மனைவி !