Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 நோட்டுக்கள் எங்கே?? ரிசர்வ் வங்கி வெளிட்யிட்ட பகீர் தகவல்!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (09:59 IST)
2019 - 2020 ஆம் நிதியாண்டில் ரூ.2000 நோட்டு ஒன்று கூட  அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என கூறப்பட்டது. இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பெயரிடப்பட்டது.  
 
இதன் பின்னர் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் மக்களின் பயன்பட்டிற்காக வெளியாகின. ஆனால், இவ்விரண்டுமே அதிக மதிப்புடைய நோட்டுகள் என்பதால் சில்லறை தட்டுப்பாடு நிலவியது. இதன் பின்னர் ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளும் வெளியானது. 
 
இந்நிலையில் சமீப காலமாக ரூ.2,000 ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு, 
உயர்மதிப்புக் கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 - 2017 மற்றும் 2017 - 2018 ஆம் நிதியாண்டுகளில் மட்டுமே ரூ.2,000 அச்சிடப்பட்டது, 2019 - 2020 ஆம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
ரிசர்வ் வங்கியின் இந்த பதிலுக்கு பொருளாதார நிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதோடு, திடீரென ரூபாய் செல்லாது என்று அறிவிப்பதை விட படிப்படியாக புழக்கத்தைக் குறைத்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
இதன் மூலம் ரூ.2,000 மதிப்பிழப்பு செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரூ.2000 நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments