Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் குழுக்களை அரசிடம் பதிவு செய்யாவிட்டால் தண்டனை! அதிரடி அறிவிப்பு

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (22:20 IST)
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பின் சிறந்த வசதிகளில் ஒன்று வாட்ஸ் அப் குரூப். இதன் மூலம் ஒரு குரூப் இணைக்கப்பட்டு அதில் தங்களுக்குள் பலவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். இந்த குரூப்பில் இல்லாதவர்கள் இந்த குரூப்பில் உள்ள மெசேஜ்களை படிக்க முடியாது. இதனால் சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் வாட்ஸ் அப் குரூப் மூலம் பல அபாயகரமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதாக தெரிய வந்தது
 
இந்த நிலையில்  வாட்ஸ் அப் குழுக்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவு செய்யத் தவறினால் முன்னறிவிப்பின்றி குரூப் அட்மின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தின் எஸ்பி செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியதாவது:
 
காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் வாட்ஸ் அப் குழு நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறிய ஒரு வாட்ஸ் அப் குழுவின் நிர்வாகிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை காவல்துறை அனுப்பியுள்ளது. யூத் ஃபார் பீஸ் என்ற பெயரிலான குழுவை மாவட்டத்திலுள்ள தேசிய தகவல் மைய அலுவலரிடம் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறினால் முன்னறிவிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
வாட்ஸ் அப் குருப்புகள் மூலம் தவறானத் தகவல்களை பரப்பி சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டதாகவும், அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் குழு நிர்வாகிகள் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments