Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை விசிட் அடித்த கையோடு அமித்ஷாவுடன் மீட்டிங் போட்ட மம்தா!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (15:38 IST)
நேற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவ சந்தித்துள்ளார் மம்தா பானர்ஜி. 
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடியும் கடந்த சில ஆண்டுகளாக எதிரும் புதிருமாக அரசியல் நடத்தி வந்தனர். இதனால் இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது அந்த விழாவிக்கு கூட செல்லாத மம்தா, மோடியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
 
ஆனால் நேற்று பிரமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தில் துவங்கப்பட உள்ள உலகிலேயே இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்ளா என மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். 
இந்நிலையில், மோடியோடு நிறுத்தி விடாமல் மம்தா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திபின் பின்னர் மம்தா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு, 
 
நான் அசாம் என்.ஆர்.சி பிரச்சினையை குறித்து உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பி அவருக்கு ஒரு கடிதம் கொடுத்தேன். அசாம் என்.ஆர்.சியில் இருந்து 19 லட்சம் பேரை விலக்குவது குறித்து நான் அவரிடம் பேசினேன். அவர்களில் சிலர் இந்தி, பெங்காலி மற்றும் கோர்கா பேசும் மக்கள் மற்றும் உண்மையான இந்திய வாக்காளர்கள் எனவும் தெரிவித்தேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments