Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கே பதிவான வாக்கு - எந்திரம் பழுதடைந்ததால் பரபரப்பு

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (18:13 IST)
நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில், 121 தொகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை புனேவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு எந்திரத்தில் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அனைத்து வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் சின்னத்திற்கே சென்றதால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்த போது தங்கள் சின்னத்திற்கு எதிரே உள்ள லைட் ஒளிராமல் காங்கிரஸ் சின்னத்திற்கு நேரே உள்ள லைட் ஒளிர்ந்ததாக தெரிகிறது. 
 
வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது குறித்து பிம்பா நகர்மாத் என்னும் பெண் அந்த வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து, அந்த  பழுதடைந்த  எந்திரத்தை சோதித்து மாற்றிய போலீசார், அப்பெணிற்கு முன் வாக்கு பதிவு செய்த 28 பேருக்கும் மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படுமென தெரிவித்தனர்.    
 
பழுதடைந்த  எந்திரத்தை மாற்ற சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனதால், வாக்காளர்கள் தேர்தல் நேரத்தை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments