Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நாங்கள் எதையும் மறைக்க விரும்பவில்லை' - அனுஷ்கா சர்மாவுடனான காதலை ஒத்துக்கொண்ட விராட் கோலி

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (13:24 IST)
அனுஷ்கா சர்மாவுடனான காதலை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒத்துக்கொண்டுள்ளார். 
 
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய விராட் ஹோலி, "இது வெளிப்படையானது. நாங்கள் எதையும் மறைக்கவில்லை. நாங்கள் எதையும் மறைக்க முயற்சிக்கவும் இல்லை. நாங்கள் எதையும் மறைப்பதற்கு விரும்பவுமில்லை. ஆனால், இந்த விஷயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் போதும், இதை விவாதப்பொருளாக ஆக்கும் போதும், நாங்கள் இருவருமே தனிப்பட்ட முறையில் இதை சரியானது என்று நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
 
மேலும், " நீங்கள் எங்களை ஒன்றாகப் பார்க்க நேரிட்டாலும் சரி, பொதுமக்களும் சரி 'இது உண்மைதானா?' என்று கேட்கின்றனர். இது பொதுஅறிவு சம்பந்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
 
மேலும், குத்துச் சண்டை வீராங்கணை சரிதா தேவி பற்றிக் குறிப்பிடுகையில், "இந்த சமபவத்தைப் பற்றி எனக்குத் தெரியும். விளையாட்டு வீரருக்கு அவர்களுடைய சங்கத்தினுடைய ஆதரவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

Show comments