Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ஆதரவு… விருதை திருப்பி அளித்த விளையாட்டு வீரர்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:25 IST)
மல்யுத்த வீரர் விஜயேந்தர் சிங் மத்திய அரசு அளித்த ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 10வது நாளாகப் போராடி வருகின்றனர்.  இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கும் அரசு தரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டது போல தெரியவில்லை. இந்நிலையில் இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

பஞ்சாப்பை சேர்ந்த மல்யுத்த வீரர் விஜயேந்தர் சிங் மல்யுத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார். அதை இப்போது விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக திருப்பி அனுப்பியுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருது கேல்ரத்னா விருது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments