Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஜேபியின் பொது சிவில் சட்டம் - ஆடுகள் நனைய ஓநாய்கள் அழுத கதைதான்

பிஜேபியின் பொது சிவில் சட்டம் - ஆடுகள் நனைய ஓநாய்கள் அழுத கதைதான்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (19:09 IST)
சித்தாந்தங்கள் தான் ஒரு கட்சியை வழி நடத்துகின்றன. அவைதான் ஓர் அரசையும், ஆட்சியையும், அரசின் கொள்கைகளையும் தீர்மானம் செய்கின்றது. அந்த இந்துத்துவா சித்தாந்தங்களின் நெடு நாளைய கனவுதான் இந்த பொது சிவில் சட்டம். இந்த கனவிற்கான படிக்கட்டுகள் தான் முத்தலாக் தொடர்பான அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள், தேசிய சட்ட ஆணையம் மக்கள் முன்பு வைத்திருக்கும் கருத்து கேட்புகள். இதை முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முற்றிலும் தோல்வி அடைந்த ஓர் அரசாங்கம் முஸ்லிம்கள் மீது தொடுத்து இருக்கும் போர் என  வருணிக்கிறது.


 
 
புரியாமல் பேசும்   பெண்ணியவாதிகளே !
 
வழக்கம் போல் எதனையும் முழுமையாக ஆராயாமல் முத்தலாக் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று குதிக்கிறார்கள் சில பெண்ணியவாதிகள். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்திலிருந்து எடுத்து கொண்டது தான் முத்தலாக். ஓர் ஆண் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய (மூன்று மாதம்) சம கால இடைவெளியில் தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முடியும்.

இது இங்கு மட்டுமல்ல உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் ஷரியத் சட்ட முறை. விடுவார்களா! இந்த பெண்ணியவாதிகள்? பேசுகிறார்கள்! பேசுகிறார்கள்! பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இதே ஷரியத் சட்டத்தில் தான் குலா சொல்லும் முறையும் உண்டு. அதாவது ஒரு பெண் ஓர் ஆணை விவாகரத்து செய்ய மூன்று மாதங்கள் காத்திருக்க தேவையில்லை. ஓர் முறை குலா சொன்னால் போதும். இது தான் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி உள்ள உரிமை.
 
மாண்புமிகு மத்திய அமைச்சர்களே !
 
ரவி ஷங்கர் பிரசாத், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லீ அவர்களே! உங்களுக்கு முஸ்லீம் பெண்களின் மீது ஏன் இந்த கரிசனம். ,முத்தலாக்கையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக எடுத்து கொள்ளக் கூடாது என்கிறீர்கள். பெண் பாலின பாகுபாடு பற்றி பேசுகிறீர்கள். புகழ்மிக்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது இல்லை என்பது சம்பிரதாயம் மற்றும் நம்பிக்கை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பெண் பாலின பாகுபாடாக தோன்றலாம். அந்த சம்பிரதாயம் மற்றும் நம்பிக்கைகள் பற்றி கேள்விக்கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா?

ஷாபானுவை போல ஒன்று இரண்டு பெண்கள் தலாக் க்ஷரியத் சட்டத்தால் பாதிக்கபட்டோம் என்று சொல்லி நீதிமன்றங்களின் கதவுகளை தட்டி இருக்கலாம். நாடு விடுதலை பெற்றப் பிறகு எத்தனை முஸ்லீம் பெண்கள் தலாக் க்ஷரியத் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் மத்திய அமைச்சர்களிடம் மனு செய்தார்கள் என புள்ளி விவரங்கள் அளிக்க முடியுமா?
 
சட்ட ஆணையமா? ஜால்ரா ஆணையமா?
 
அமரர் கல்கியின் புகழ் மிக்க வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது."பிரச்சனைகள் வரும் போது அதன் மீது கல்லைப்போடு அல்லது கமிஷனை போடு” என்பது தான் அது. அது போல தான் மத்திய அரசு பிரச்சனைகள் வரும் போது எல்லாம் மக்களிடம் கருத்துக்கேட்கும். பிறகு அதன் எண்ணங்களே செயல்படுத்தும். இந்த கருத்துக்கேட்புகள் எல்லாம் கண் துடைப்புகள் தான். 
 
சட்டஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பான 16 கேள்விகளை மக்கள் முன்பு வைக்கிறது. கேள்வி எண் 8-ல் இந்து மத பெண்களின் சொத்துரிமை பற்றி பேசுகிறது. கேள்வி எண் 9-ல் கிறித்துவ மத பெண்களின் விவாகரத்திற்கு முந்தைய பிரிந்திருக்கும் காலஅளவை பற்றி பேசுகிறது. மற்ற 14 கேள்விகளும் முஸ்லிம்கள் பற்றியவை தான். ஆனால் முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முஸ்லிம்கள் இந்த கருத்துக் கேட்பை புறக்கணிப்பார்கள் என்று அறிவித்த நிலையில் யாரும் இல்லாத கடையில் சட்ட ஆணையம் டீ ஆற்றி கொண்டிருக்கிறது. இது வரை சட்ட ஆணையம் உலமாக்களை அழைத்துப் பேசியதாக தெரியவில்லை. அவர்களிடம் கருத்துக்கேட்கவில்லை. பிறகு ஏன் இந்த வேஷம். நீங்கள் எதை நிரூபிக்க ஆசைப்படுகிறீர்கள்? ஆடுகள் நனைய ஓநாய்கள் அழுத கதையையா ?
 

 














இரா. காஜா பந்தா நவாஸ்,  பேராசியர் sumai244@gmail.com
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments