Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் கொடுக்க வந்தவரை மசாஜ் செய்ய வற்புறுத்திய காவல் அதிகாரி [வீடியோ]

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (02:42 IST)
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த இளைஞர் ஒருவரை காவல் துறை துணை ஆய்வாளர் ஒருவர் மசாஜ் செய்ய வைத்த வீடியோ வெளியாகி உள்ளது.
 

 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மோகன்லால்கன்ஜ் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராம் யாக்யா யாதவ் என்ற துணை ஆய்வாளரிடம் புகார் அளிப்பதற்காக இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய புகாரை கொடுத்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி கேட்டுள்ளார்.
 
அதற்கு அந்த காவலர் தன் கால்களை பிடித்துவிடும்படி அந்த இளைஞரிடம் வற்புறுத்தவே. காவலரின் கால்களை பிடித்துவிடும் வீடியோ வெளியாகி உள்ளது. இதுபோன்று நடப்பது இது முதன்முறை அல்ல.
 
முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் பரவ, தற்போது அந்த காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ இங்கே:
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments