Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை 100 சதவீத இந்து நாடாக மாற்றுவோம்: வி.எச்.பி. தலைவர் பேச்சு

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2014 (19:22 IST)
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி)  தலைவர் பிரவீன் தொகாடியா பேசியதாவது:-
 
நாட்டில் உள்ள இந்துக்களின் சதவீதத்தை 100 ஆக மாற்றுவோம். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது, இந்தியாவில் 82 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். இந்த விகிதம் குறைவதை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
 
அவர்களுக்கு நாங்கள் போதிய பாதுகாப்பினை வழங்குவோம். லவ் ஜிகாத்தை முற்றிலும் ஒழிக்க எங்களது அமைப்பு பாடுபடும். இவ்வாறு தொகாடியா பேசினார்.
 
இந்தியா இந்து மதத்தினரின் சொந்த நாடு என்று நேற்று முன்தினம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய நிலையில், விஎச்பி தலைவர் தொகாடியாவின் நேற்றைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

Show comments