Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு- காங்கிரஸ் வரவேற்பு

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (17:27 IST)
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி இத்தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. இந்த  தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வெளியிட்டுள்ள நிலையில் மூன்று நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று என தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகள் செல்லாது என தீர்ப்பளித்தனர்.

 இதனை அடுத்து நிலையில் அதிக நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு செல்லும் என தீர்ப்பளித்து உள்ளதை அடுத்து இந்த சட்டம் தொடர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என பாஜகவினர் கூறி வரும்  நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ‘’சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சமூகநீதிக்கு எதிரான முன்னேறி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்’’ என  மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இத்தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாயர்  கூறியுள்ளதாவது: ’’பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒது செல்லும் என்று  இந்த 103 வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை  வரவேற்பதாகத் ’’தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments