Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் சோனியா காந்தி - உத்தவ் தாக்கரே சந்திப்பு.. முதல்வர் வேட்பாளர் யார்?

Siva
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:19 IST)
மகாராஷ்டிரா மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை அடுத்து உத்தவ் தாக்கரே டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்ததாகவும் இதனை அடுத்து சோனியா காந்தி அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே  டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு அவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டவரை சந்தித்த நிலையில் அடுத்ததாக சோனியா காந்தி உடன் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி, முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் இருந்து முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் விரிவான ஆய்வுக்கு பின் தொகுதி பங்கீடுகள் குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட உத்தவ் தாக்கரே சிவசேனா முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் பதவி தனக்கு தான் என்பதை உறுதி செய்வதற்காக தான் அவர் டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments