Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதற கதற கண் முன்னே பலாத்காரம் செய்யப்பட்ட மகளை ரத்தம் வழிய தூக்கி சென்றேன்: தந்தையின் மனக்குமுறல்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (14:44 IST)
உத்தரபிரதேசத்தில் காரில் சென்றவர்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி தந்தை கண் முன்னே தாயையும், மகளையும் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
நடந்த சமபவத்தின் போது அந்த கொடூரர்கள், மருதுவர்கள், காவல்துறையினர் நடந்துகொண்டதை அந்த தனதி விவரித்துள்ளார். உத்திரபிரதேச தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச் 91-ல் சென்று கொண்டிருந்தபோது அந்த முகம் தெரியாத கும்பல் எதிரில் வந்தது.
 
கையில் ஆய்தத்துடன் நின்று கொண்டிருந்தவர்கள் அவர்கள் எதிரி யாரையாவது தேடுகிறார்களா என நினைத்து காரின் வேகத்தை கூட்டாமல், அவர்களுக்கு இறங்கி பதில் செல்ல நினைத்தது தான் விபரீதமாக முடிந்து விட்டது.
 
அடுத்த நிமிடமே அவர்கள் நடந்துகொண்டதை எதிர்பார்க்கவேயில்லை. காரை நிறுத்திய கொள்ளையர்கள் நகை, பணம், மனைவி, மகள் என எதையும் விட்டு வைக்கவில்லை.
 
என்னை கட்டிப்போட்டுவிட்டு என் கண் முன்னே மனைவியையும், மகளையும் பலாத்காரம் செய்தார்கள். என் மகள் சின்ன பொண்ணு, அவளுக்கு கனவுகளை தவிர வேறு எதுவும் தெரியாது. என்னுடைய கூக்குரல் அங்கு எடுபடவில்லை. இருபுறமும் என்னால் பார்வையை திருப்பவே முடியவில்லை.
 
கையாலாகாத நிலையில் இருந்தேன் நான். கத்தி, கதறி, கெஞ்சியும் அவர்கள் என் குழந்தையை விட்ட பாடில்லை. மாறி மாறி என் குழந்தையை அவர்கள் பலாத்காரம் செய்தார்கள்.
 
ரத்தம் வழிய என் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினேன். ஆனால் அவர்கள் எங்களை அலைக்கழித்தார்கள். உயிருக்கு போராடும் என் மகளுக்கு அவர்கள் அவசர முதலுதவி கூட செய்யவில்லை. என் மகள் சாகக்கூடாது என மருத்துவர்களிடம் கதறினேன் ஆனால் அவர்கள் இது போலீஸ் கேஸ் என கொஞ்சம் கூட கருணை இல்லாமல் பேசினார்கள்.
 
பின்னர் 100-க்கு போன் செய்தேன், அவர்களும் அலட்சியமாக தாமதமாக தான் வந்தனர். காதை குடைந்துகொண்டு மெத்தனமாக நடந்துகொண்டார்கள். இந்த சம்பவத்தில் 3 பேர் இதுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments