Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் கொடுக்க வந்தவரை ஷூ பாலிஸ் போட சொன்ன போலீசார் : அதிர்ச்சி வீடியோ

Webdunia
திங்கள், 30 மே 2016 (17:07 IST)
செல்போன் காணவில்லை என்று புகார் கொடுக்க சென்ற ஒருவரை, காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் ஷூ பாலிஸ் போட சொன்ன சம்பவம் வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
முசாபர்நகரில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டார். எனவே அதுபற்றி புகார் கொடுக்க அவர் சார்தவால் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், புகார் கொடுக்க சென்றவர் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.
 
அதற்கு அவர், தான் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்று கூறியுள்ளார். அப்படியெனில், எங்கள் ஷூக்களை பாலிஸ் போட்டுக் கொடு. அப்போதுதான் உன் புகாரை பதிவு செய்வோம் என்று கூறியுள்ளனர். அவரும் வேரு வழியின்றி அவர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டுக் கொடுத்துள்ளார்.
 
இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வைரலாக பரவிய அந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Courtesy : ANI News

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments