Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளிகள் அப்பாவிகள்; இந்த பொண்ணுக்குதான் தவறான தொடர்பு! – குண்டை தூக்கிப்போட்ட பாஜக தலைவர்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (13:36 IST)
ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் குற்றவாளிகளில் ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பாஜக பிரமுகர்கள் பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாவட்ட பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்ஸவா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் குறிப்பிட்ட அந்த நபர்களால் வன்கொடுமை செய்யப்பட்டதற்கோ, கடத்தப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அந்த நால்வரில் ஒருவருடன் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவரை காண அந்த பெண் சென்றிருக்க வேண்டும். இதையறிந்த பெண்ணின் பெற்றோரே கூட பெண்ணை கொன்றிருக்கலாம்

இதுபோன்ற கொலை சம்பவங்கள் அரிசி, கோதுமை வயல்களில் நடப்பதில்லை. பெரும்பாலும் கரும்பு, சோள கொல்லைகளிலேயே நிகழ்கின்றன. ஏனென்றால் அவை ஆளுயரத்திற்கு வளர்ந்திருப்பதால் உள்ளே நடப்பதை பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என பேசியுள்ளார்.

நாடு முழுவதும் ஹத்ராஸில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராடி வரும் நிலையில் பாஜக பிரமுகரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்ரீவத்ஸவா மீதே 44 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

அடுத்த கட்டுரையில்