Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014 -15 நிதிநிலை அறிக்கை : கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.2,307 கோடி நிதி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (13:16 IST)
2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கங்கை நதியை தூய்மைப்படுத்தும்  திட்டத்திற்கு ரூ.2,307 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்‌து வரு‌கிறா‌ர்.
 
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் அவர், நவாமி கங்கா என்ற கங்கை நதியை தூய்மைப்படுத்தும்  திட்டத்திற்கு ரூ.2,307 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், புலம் பெயர்ந்த காஷ்மீர் மக்களின் நலன் காக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், போர் நினைவுச் சங்கங்கள், அருங்காட்சியங்கள் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும், எல்லையோர கிராமப்புறங்களை மேம்படுத்த ரூ.990 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும், நதிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும், கங்கை நதியை சுத்தப்படுத்த அயல் நாடு வாழ் இந்தியர் நிதித் திட்டம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 
நிதிநிலை அறிக்கையில், காஷ்மீரில் உள், வெளி விளையாட்டு அரங்குகள் உலகத் தரத்தில் உருவாக்கப்படும். நாடு முழுவதும் தேசிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும், முதியோருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும், வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, கணினி, சோப்பு, LED, LCD, தொலைக்காட்சி விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன
 

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

Show comments