Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகற்ற பெண்கள்தான் வரதட்சணைக்கு காரணம்: பள்ளி பாடநூலில் விளக்கம்

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:00 IST)
அழகற்ற, ஊனமுற்ற பெண்களுக்கு திருமணம் நடைப்பெறுவது கடிணம், அவர்களால் தான் இன்றும் வரதட்சணை முறை செயல்பாட்டில் உள்ளது என்று மராட்டிய மாநில சமூகவியல் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.


 


மராட்டிய மாநிலம்  12ம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் முக்கிய சமூகப் பிரச்னைகள் என்ற தலைப்பில் வரதட்சணை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வரதட்சணைக்கு காரணம் அழகற்ற பெண்களும், ஊனமுற்ற பெண்களும் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில்,

பெண்கள் அழகு இல்லாமலும், மாற்றுத்திறனாளியாகவும் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடைப்பெறுவதும் கஷ்டம். இந்த பெண்களை திருமணம் செய்துக்கொள்ள மணமகன் வீட்டில் அதிக அளவில் வரதட்சணை கேட்கப்படுகிறது. இந்த பெண்களின் பெற்றோர்கள் வேறு எதுவும் செய்ய முடியாமல் வரதட்சணை கொடுத்து வருகின்றனர். இந்த காரணங்கள் தான் வரதட்சணை முறை இன்றும் செயல்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அந்த பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை பலரும் படித்துவிட்டு கடந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தவுடே கூறியதாவது:-

மராட்டிய  மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கலந்து ஆலோசித்தேன். இந்த பாடத்திட்டத்தை கடந்த மூன்று வருடங்களாக மாணவர்கள் படித்துவருகிறார்கள். இது அரசியலாக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல என்று நான் நினைக்கிறேன்.

மாநிலக் கல்வித்துறை தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்த பின்னர், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments