Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராட்டியத்திற்குள் சிபிஐ நுழைய தடை! – உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (13:51 IST)
மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் விசாரணை நடத்த அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் நுழைய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார்.

சிபிஐக்கு வழங்கப்படும் வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு பொது இசைவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில காலங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் திரும்ப பெற்றன.

இந்நிலையில் மும்பை தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு என சிபிஐ மகராஷ்டிராவில் ஏகப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சிபிஐக்கு வழங்கி வந்த பொது அனுமதியை ரத்து செய்துள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே. இனி விசாரணைகளுக்கு மாநில அரசின் அனுமதி பெற்றே சிபிஐ நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments