Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயம் திருடிய இருவர் கைது; வெங்காயம் வைத்திருப்போருக்கு காவல் துறை எச்சரிக்கை

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2015 (16:20 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் 4000 கிலோ வெங்காயத்தை திருடிய இருவரையும், அதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
வெங்காயத்தின் விலை சமீப நாட்களாக உயர்ந்து கொண்டே செல்வதால், வெங்காயம் விலை உயர்ந்த பொருளாக மாறி வருக்கிறது. இதையடுத்து வெங்காய மண்டிகளுக்கு போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மொத்த வெங்காய விலை கடையில் 60 கிலோ எடை கொண்ட 70 மூட்டை வெங்காயம் திருட்டுபோனது. இதுகுறித்து கடை உரிமையாளர் கிஷான் அகர்வால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், அங்கிருந்த பாதுகாவலர் கஜோர் 4 ஆயிரத்து 200 கிலோ வெங்காயத்தை திருடி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை மீட்ட காவல்துறையினர், பதுக்கலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
 
இதே போல் அதிகளவில் மகாரஷ்ட்டிரா மாநிலத்தில் வெங்காயம் திருடு போவதால் அங்குள்ள மொத்த கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், வெங்காயம் வைத்திருப்போர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments