சத்தியத்தை தொந்தரவு செய்யலாம்; தோற்கடிக்க முடியாது: விரக்தியில் சச்சின் பைலட்??

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (15:21 IST)
துணை முதல்வர் பதவியும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் சச்சின் பைலட். 
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள்  உள்ளதாக கூறி வருகிறார்.  
 
கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக இருந்தது. எனவே, நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    
இதனைத்தொடர்ந்து இன்று ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் சச்சின் பைலட்டை காங்கிரசிலிருந்து நீக்க எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்தனர்.  
 
அதன்படி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சத்தியத்தை தொந்தரவு செய்யலாம்; ஆனால் தோற்கடிக்க முடியாது என சச்சின் பைலட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சச்சின் பைலட் ட்விட்டரில் இம்மாதிரி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments