செல்பி எடுத்த மாணவர் ரெயில் மோதி பலி

செல்பி எடுத்த மாணவர் ரெயில் மோதி பலி

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (16:28 IST)
தண்டவாளத்தில் செல்பி எடுக்க சென்ற மாணவர் ரெயில் மோதி பலி ஆகி உள்ளார்.


 
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் நெரவாடா மெட்டா பகுதியைச் சேர்ந்தவர் சபீர்பாஷாவின் மகன் இத்தூருஸ் பாட்சா (20)  என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இவர் ரெயில் வேகமாக செல்லும்போது அதன் அருகே நின்று செல்பி எடுக்க விரும்பினார். தனது நண்பர் ஹரிஸ்சுடன் கல்லூரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு சென்றார். அங்கு இருவரும் ரெயில் வரும் சமயத்தில் ஒன்றாக நின்று செல்பி எடுக்க முடிவு செய்தனர். 

அப்போது வேகமாக ஒரு ரயில் வந்துகொண்டிருந்தது. இதை பார்த்த இருவரும் செல்பி எடுக்க தயாரானார்கள். ஆனால் அவர்கள் செல்பி எடுப்பதற்குள் ரெயில் அருகே வந்து விட்டது. சுதாரித்துக் கொண்ட ஹரிஸ் தண்டவாளத்தில் இருந்து ஒதுங்கினார். ஆனால் இத்தூருஸ் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments