Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் 50 பேர் காயம்

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2014 (14:56 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் திம்பூர்–கமாக்யா இடையே சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை  தடம் புரண்டது, இந்த விபத்தில் சுமார் 50 பயணிகள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அஸ்ஸாமில் உள்ள மோரிகான் பகுதியில் சென்று கொண்டிருந்த 15666 BG எக்ஸ்பிரஸ் ரயில் அஜுரி ரயில் நிலையத்திற்கு அருகே தடம் புரண்டது. ஒன்றன்பின் ஒன்றாக 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால், சுமார் 50 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
 
அவர்களில் 17 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.அவர்கள் மோரிகானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments