Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரண்ட் இல்லாததால் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் : தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (11:18 IST)
மும்பையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கரண்ட் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த நிலையில் தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மும்பையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சாஹிதுன் என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடையானது 
 
இதனை அடுத்து டார்ச் மூலம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில் தாய் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது. அறுவை சிகிச்சையின் போதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர் செயல்படாமல் இருந்ததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிர் இழந்த பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர் 
 
இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

அடுத்த கட்டுரையில்
Show comments