Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தேசிய சினிமா தினம்.. விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்! – மகிழ்ச்சியில் பட நிறுவனங்கள்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (12:56 IST)
இன்று தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் நிலையில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் குறைந்த விலைக்கு டிக்கெட்டுகளை விற்று வருகின்றன.

சினிமா பார்ப்பவர்களை போற்றும் விதமாகவும், சினிமா பார்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று (செப்டம்பர் 23) தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்ட மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் இன்று மட்டும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.75 மட்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ: பிரபல ஓடிடியில் வெளியானது லைகர் திரைப்படம்!

இந்நிலையில் நேற்று முதலாகவே மக்கள் பலர் ஆர்வமாக ரூ.75 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்துள்ளனர். மேலும் இன்று நேரிலும் பலர் டிக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இன்று மல்டிப்ளெக்ஸ்களில் திரையிடப்படும் படங்கள் பெரும்பாலும் முழுவதும் இருக்கைகள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரம்மாஸ்திரா, சுப், வெந்து தணிந்தது காடு படங்களுக்கு அதிகமானோர் செல்வதாகவும், சமீபத்தில் வெளியாகியுள்ள எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ், தோக்கா உள்ளிட்ட படங்களுக்கு குறைந்த விலை டிக்கெட்டுகளால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments