Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்கத்தில் இன்று 2ஆம் கட்ட தேர்தல்: மம்தா போட்டியிடும் தொகுதியிலும் தேர்தல்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (06:40 IST)
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை ஆகிய 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் அதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறிய அளவில் விபத்து நேர்ந்தாலும் முதல்வர் மம்தா அவர்கள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே தனது தொகுதியிலும் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார் 
 
மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியில் இருந்தாலும் உண்மையான போட்டி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவுக்கும் இடையே தான் இருப்பதாக கூறப்படுகிறது
 
அனைத்து கருத்துக் கணிப்புகளும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டாலும் பாஜக 100 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இன்று நடைபெற உள்ள இரண்டாம்கட்ட தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments