Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வெற்றி பெறுவது யார்?

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (08:01 IST)
இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடத்தப்படாத நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இதுவரை இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மல்லிகார்ஜூனே கார்கே, சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதை இந்த தேர்தலில் 9200 பேர் வாக்களிக்க உள்ளனர்.
 
இன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு 20ஆம் தேதி புதிய தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினமே தலைவர் பதவிக்கு பொறுப்பு ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments