Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் நரேந்திர மோடி

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2015 (01:05 IST)
அமெரிக்காவின் 239 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த அமெரிக்கா கடந்த 1776ஆம் வருடம் ஜூலை மாதம் 4ஆம் தேதி விடுதலை பெற்றது.  இதனையடுத்து, அந்நாட்டின் 239 ஆவது சுதந்திர தினம் ஜூலை 4 ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்காவில் சுதந்திரத்தை கொண்டாடும் மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட கால உறவை மேலும் புதுபிக்க விரும்புகின்றோம். இந்த நட்பு வலுப்பெற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

Show comments