கோவில் மூடப்படும் அறிவிப்பை திரும்ப பெற்ற திருப்பதி தேவஸ்தானம்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (22:37 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை அடுத்து கோவிலுக்குள் 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற தேவஸ்தானத்தின் அறிவிப்புக்கு ஆந்திர மாநில அரசியல் கட்சிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு  தெரிவித்ததை அடுத்து, திருப்பதி திருமலை தேவஸ்தானம் அந்த முடிவை திரும்ப பெற்றுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து கோவிலை சுத்தம் செய்ய வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களுக்கு கோவில் முற்றிலும் மூடப்படும் என்றும் அந்த ஆறு நாட்களுக்கு பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
 
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ரோஜா, கோவிலில் உள்ள புதையலை எடுக்க முயற்சியா? என்ற சந்தேகத்தை கிளப்பினார். இதனையடுத்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் திரும்ப பெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முடிவை எடுத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே கோவில் சுத்தம் செய்யப்படும் நாட்களில் பக்தர்கள் சிறுசிறு குழுவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அடுத்த கட்டுரையில்
Show comments