Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் வாங்கும் விதியில் மாற்றம்: தேவஸ்தானம் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (17:12 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் வாங்கும் விதியில் மாற்றம்: தேவஸ்தானம் அறிவிப்பு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் வழங்கும் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி என்பவர் 300 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டண சேவை டிக்கெட் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் டிக்கெட் ஆகியவை இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு முன்பதிவு மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுமம் உரிமம் ஆகிவற்றை பயன்படுத்த முடியாது என்றும் ஆதார் அட்டை மட்டுமே காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
அதேபோல் திருப்பதியில் இருந்து பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு திவ்யதர்சன டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் பாதயாத்திரை ஆக செல்லும்போது தரிசன டோக்கனை பெற்று வருவதால் இரண்டு வகையான தரிசன வாய்ப்புகளை பெறுகிறார்கள் என்றும் இதனால் பல குளறுபடிகள் ஏற்படுகின்றன என்றும் அதனை தடுக்கவே பாதயாத்திரை செல்வதற்கு வழங்கும் டிக்கெட் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments