Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை குறிவைக்கும் தற்கொலைப்படை: இந்தியாவிற்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (18:35 IST)
பிரதமர் மோடியை தற்கொலைப்படை மூலம் கொல்ல திட்டம் தீட்டி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போல் நாட்டின் தலைநகர் டெல்லியிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும், கையெறி குண்டை வீசவும் லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளது.
 
இந்த சதித்திட்டத்துடன் தீவிரவாத அமைப்பின் தளபதி அபு துஜானா என்பவனின் துணையுடன் 4 தீவிரவாதிகள் கடந்த மாதமே இந்தியாவிற்குள் நுழைந்ததாக தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
 
பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ க்கும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவிற்கும் இந்த சதித்திட்டத்தில் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
 
மத்திய உளவுத்துறை மற்றும் டெல்லி, ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டத்துடன் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

Show comments