Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த இடி...பெட்ரோல் , டீசல் மீதான வரி உயர வாய்ப்பு ! அமைச்சர் சூசகம்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (17:18 IST)
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று,  பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. 
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, பாராளுமன்றத்தில் ,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பொதுபட்ஜெட் தாக்கல் செய்தார்.
 
இதில், சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்க்காக  பெட்ரொல் டீசல் மீதான சிறப்பு கூடுதல் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து, மத்திய வருவாய்துறை செயலர் அஜய்பூசன் பாண்டே ஒரு தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில், பெட்ரோ, டீசல் மீதான வரியை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
 
மேலும், மத்திய பட்ஜெட் அறிவிப்பின் படி பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல்  வரி 1 லிட்டருக்கு 8 ரூபாய் வரையிலும் டீசலுக்கு  ரூ. 2 வரையிலும் உயரவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில்  பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி  லிட்டருக்கு தலா ரூ. 9 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments