Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிற்காமல் சென்ற பேருந்து.! ஓட்டுநர் மீது பாம்பு வீசிய பெண்.! குடிபோதையில் ரகளை..!!

Senthil Velan
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (16:09 IST)
ஹைதராபாத்தில் பேருந்து ஓட்டுனர் மீது பாம்பு குட்டியை வீசி குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
 
ஹைதராபாத் நகரின் நல்லகுண்டா பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், அவ்வழியாக வந்த  ஆர்.டி.சி பேருந்தை நிறுத்த முயன்றார். ஆனால் பேருந்தை ஓட்டுநர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், பீர் பாட்டிலை தூக்கி எறிந்து கண்ணாடியை உடைத்து பேருந்தை சேதப்படுத்தினார்.
 
இதை அடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், கண்ணாடியை உடைத்தது குறித்து கேள்வி எழுப்பி, அந்த பெண்ணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பெண், தான் பையில் வைத்திருந்த பாம்பு குட்டியை ஓட்டுனர் மீது வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நடத்தி விசாரணையில் பாம்பு குட்டியை வீசிய பெண் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

ALSO READ: அடுத்த முறை தங்க பதக்கம் வெல்லலாம்.! நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து.!!

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். பேருந்து ஓட்டுனர் மீது பெண் ஒருவர் பாம்பு வீசிய சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

சயீப் அலிகான் உண்மையாகவே தாக்கப்பட்டாரா? அல்லது நாடகமா? மகாராஷ்டிரா அமைச்சர் சந்தேகம்..!

ரயில் விபத்தில் 13 பேர் பலி.. டீ விற்பவர் பரப்பிய தீ வதந்தி தான் காரணமா?

பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சொல், செயல் கூட பாலியல் துன்புறுத்தல் தான்: நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments