Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலுக்கு இடையூறு.! சகோதரன் கொலை.! கள்ளக்காதலுடன் தங்கை கைது..!!

Senthil Velan
வியாழன், 9 மே 2024 (14:16 IST)
கள்ளக்காதல் விவாரத்தில் சகோதரனை கொலை செய்து நாடகமாடிய சகோதரியை கள்ளக்காதலுடன் கேரள போலீசார் கைது செய்தனர்.
 
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் நெடும்பால் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (55). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்கவாதம் வந்ததால் பாதிப்படைந்து படுத்த படுக்கையாக இருந்து வந்தார். இவருடைய 50 வயது சகோதரி, படுத்த படுக்கையான சந்தோஷை கவனித்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில் சந்தோஷின் சகோதரிக்கும், செபாஸ்டின்(49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும், சந்தோஷுடன் கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சந்தோஷின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்த பகுதி மக்கள், புதுக்காடு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
 
அந்தப் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், உயிரிழந்த சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதை அறிந்த செபாஸ்டின் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, உடனடியாக அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இதில் சந்தேகமடைந்த போலீசார், உயிரிழந்த சந்தோஷத்தின் சகோதரி, செபாஸ்டின் ஆகியோரிடம்  தீவிர விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில், சந்தோஷத்தின் சகோதரிக்கும், செபாஸ்டினுக்கும் இடையிலான உறவுக்கு சந்தோஷ் இடையூறாக இருப்பதாக அவர்கள் கருதினர். இதனால், அவர்கள் இருவரும், சந்தோஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பேரில், கடந்த 5ஆம் தேதி  2 பேரும், படுத்த படுக்கையாக இருந்த சந்தோஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அப்பகுதி மக்களிடம், நோயால் பாதித்திருந்த சந்தோஷ் இறந்து விட்டதாக கூறி நாடகம் ஆடியது தெரியவந்தது. 

ALSO READ: நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்..! நாய்கள் கடித்தால் உரிமையாளர் மீது நடவடிக்கை..! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை...!!
 
இதனைத் தொடர்ந்து, கொலை செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments