Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுண்டர் செய்யப்பட்ட நால்வர் உடல்: தெலங்கானா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (23:08 IST)
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட நால்வர் இன்று அதிகாலை தெலுங்கானா போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த என்கவுண்டர் ஒரு திட்டமிட்ட என்கவுண்டர் என்றும் இந்த என்கவுண்டர் குறித்து முன்பே உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தெரியும் என்றும் இதுபோன்ற போலி என்கவுண்டர்கள் பிற்காலத்தில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க வழிவகை செய்யும் என்றும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன
 
இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து விசாரணை செய்ய தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்திற்கு நேரில் ஒரு குழுவை அனுப்பி உண்மையை கண்டறிய உத்தரவிட்டுள்ளது
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற போது என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4பேரின் உடல்களை வரும் ஒன்பதாம் தேதி வரை பதப்படுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது
 
இதனை அடுத்து நால்வரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் 9ம் தேதிக்கு பின்னரே நால்வரின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்