Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் நடிகை ரோஜா பின்னடைவு.. ஆட்சியை இழக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி..!

Siva
செவ்வாய், 4 ஜூன் 2024 (13:19 IST)
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் அங்கு ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி படுதோல்வி அடைந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கிட்டத்தட்ட பிடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது என்பதும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது என்பதும் ஜனசேனா கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது என்பதும் பாரதிய ஜனதா கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
எனவே ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகிறார் என்பதும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை இழக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா பின்னடைவில் இருப்பதாகவும் அவர் தெலுங்கு தேச கட்சி வேட்பாளரை விட சுமார் 20000 வாக்குகள் குறைவாக எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments