Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் சிறுவனுக்கு கைவிலங்கு: விளக்கம் அளிக்க மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ்

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2015 (15:17 IST)
தெலங்கானாவில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் பேருந்தில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அங்குள்ள மேடக் மாவட்டம் ஜோகிபெத் பகுதியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் 10 வயது சிறுவன் போலீஷாரால் கைது செய்யப்பட்டான். நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்திய போலீஷார் நிஜாபாத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அவனை அடைப்பதற்காக பேருந்தில் அழைத்துச் சென்றனர்.


 
 
கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறுவன் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தெலங்கான குழந்தைகள் நல அமைப்பு இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மேடக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
சிறார் குற்றவியல் சட்டப்படி  கைது நடவடிக்கைளுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்களுக்கு கைவிலங்கு போடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

Show comments