Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் கிடந்த பர்ஸ்.. உள்ளே இருந்த தற்கொலை கடிதம்! – திரைப்படத்தை மிஞ்சும் சம்பவம்!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (15:13 IST)
தற்கொலை செய்து கொள்ள சென்ற பெண் காணாமல் போன பர்ஸால் காப்பாற்றப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேருந்தில் சென்று செகந்திராபாத்தில் உள்ள ஜூபிளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவரது பர்ஸை தவறவிட்டு சென்றுள்ளார். அதை கண்டெடுத்த பேருந்தின் நடத்துனர் ரவீந்திரன் பர்ஸை திறந்து பார்த்துள்ளார்.

அதில் பெண்ணின் அடையாள அட்டை, பணத்துடன் ஒரு கடிதமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறிப்பிட்டிருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவீந்திரன் உடனடியாக இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலாண் இயக்குனர் போலீஸுக்கு தகவல் அளித்ததுடன், போக்குவரத்து கழக பணியாளர்களையும் பெண்ணை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். சில மணி நேரங்களில் அந்த பெண் ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தவறிய பர்ஸில் இருந்த கடிதத்தை கொண்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments