Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆம் வகுப்பு ஃபெயிலானவர் தேஜஸ்வி யாதவ்.. பிரசாந்த் கிஷோர் கிண்டல்..!

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (12:53 IST)
தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவ்வை ஒன்பதாம் வகுப்பு பெயில் ஆனவர் என கிண்டலாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளது.
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர் ஒரு முதலமைச்சர் மகனாக இருந்து கொண்டு ஒன்பதாம் வகுப்பு கூட தேர்ச்சி செய்யாத ஒருவர் கல்வி குறித்த கண்ணோட்டத்தை தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் ஒன்பதாம் வகுப்பு பெயிலான ஒருவர் பீகார் மாநிலத்தின் வளர்ச்சி பாதையை காட்டுவது கேவலமான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
 
தேஜஸ்வி யாதவுக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாது என்றும் அப்படி இருக்கும் நிலையில் பீகார் மாநிலம் எப்படி வளரும் என்றும் அவர் கூறினார்.
 
பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் சம்பாதித்த புகழை வைத்தே தேஜஸ்வி யாதவ் கட்சியில் இருக்கிறார் என்றும் அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையாது, பத்து நாள்  டியூஷன் சென்றாலும் கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் சோசியலிசம் பற்றி 10 நிமிஷம் அவரால் பேச முடியாது என்று பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவ்வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments