Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட ஆசிரியர்...

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (17:33 IST)
கேரளாவில் தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவிகளை, ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் படித்து, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
கேரள பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் ஆபாச படங்கள் முகநூலில் அடிக்கடி வெளிவருவதாக அந்த மாநில போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை செய்த சைபர் கிரம் போலீசார், அந்த ஆபாச படங்கள், முகநூலில் ஆஷிக் என்ற போலி பேஸ்புக் முகவரியில் வெளியாகி வருவதை கண்டுபிடித்தனர்.
 
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண்குமார் (36) என்ற ஆசிரியர் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு 6 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்பில், அவரிடம் டியூசன் படிக்க வரும் மாணவிகளின் ஆபாச படங்களை அவர் சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், கழிவறை மற்றும் மாணவிகள் அமர்ந்து படிக்கும் மேஜைகளின் கீழ் சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை வைத்து ஆபாச படங்களை எடுத்து, அதை தொடர்ந்து போலி பேஸ்புக் முகவரியில் வெளியிட்டு வந்தது தெரிய வந்தது. 
 
அவரை கைது செய்த போலீசார், அந்த வீடியோ மற்றும் படங்களை வைத்து, மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை ஏதும் கொடுத்து வந்தாரா என அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த விவகாரம் அவரிடம் டியூசன் படித்த மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

சர்ச்சையானாலும் விற்பனையில் குறைவில்லை.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை..!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்.. அவசரமாக கொடுத்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்