Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுமலையானுக்கு வைரக் கிரீடம் அளித்த தமிழர்: மதிப்பு ரூ.1 கோடி

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (13:27 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரக் கிரீடத்தை, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.


 
 
கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் பாலமுருகன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரக் கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மனைவி பூர்ணிமாவுடன் இன்று காலை திருமலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர், சாமி தரிசனம் செய்யும் போது கோவில் துணை செயல் அலுவலர் ரமணாவிடம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரக் கிரீடத்தை வழங்கினார்.
 
இதை தேவஸ்தான கோயில் இணை அலுவலர் சின்னங்காரி ரமணா பெற்றுக் கொண்டார். அப்போது, இந்த கிரீடத்தை சுபமுகூர்த்த நாளில் ஏழுமலையானின் உற்சவமூர்த்திக்கு அணிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும், வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 1.88 கோடி வரை வசூலானதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

Show comments