Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் ராகுல் காந்தி கை நடுங்காமல் பேசட்டும் - கலாய்த்த தமிழிசை சவுந்தரரஜன்

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (15:39 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.


 

 
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி “ நாடாளுமன்றத்தில் ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதுபற்றி விவாதத்தில் பங்குபெறவும் அவர்கள் தயாராக இல்லை. இன்னும் நான் பேசினால் பூகம்பம் ஏற்பட்டுவிடும்” என்று கூறினார். 
 
ராகுலின் கருத்திற்கு பல பாஜக தலைவர்கள் கிண்டலாக தங்கள் பதிலை தெரிவித்து வருகின்றனர். 
 
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் “ராகுல் சொல்கிறார். கருப்புப்பண ஒழிப்பைப் பற்றி அவர் பேசினால் மிகப்பெரிய நில நடுக்கமே வருமாம். முதலில் அவர் கை கால் நடுக்கம் இல்லாமல் பேசட்டும்” என கிண்டலடித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments