Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடம்னா பொது மக்களுக்கானது; போராட்டம் பண்றதுக்கு இல்ல! – உச்சநீதிமன்றம்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (13:49 IST)
பொது இடங்களில் காலவரையற்று போராட்டம் நடத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் பலர் மூன்று மாத காலமாக போராட்டம் நடத்தினர். பின்னர் கொரோனா காரணமாக அந்த போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பொது இடத்தை பல நாட்களுக்கு ஆக்கிரமித்து போராடுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் உச்சநீதிமன்றம் “பொது இடங்களை கால வரையின்றி ஆக்கிரமித்து கொண்டு போராடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஷாகின் பாக் பகுதியோ அல்லது வேறு எந்த பகுதியோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டங்கள் அமைகின்றன. அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் உரிமையை நாங்கள் மதிக்கிறொம். அதேசமயம் அது நியமிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு தரும் விதமாக பொது இடங்களை கால வரையின்று ஆக்கிரமித்து போராட்டம் நடத்தினால் அவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்க தேவையில்லை” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்கழி பிரதோஷம் மற்றும் பெளர்ணமி.. சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரி பாடல்.. டிஸ்கவரி புக் பேலஸ் விளக்கம்..!

முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டது ஏன்? காவல்துறையினர் விளக்கம்..!

தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கைது.. பீகார் போலீசார் அதிரடி..!

சென்னை பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்: தொடங்கும் நாள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments