Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:23 IST)
நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
 
பட்டாசு விற்பனையால் காற்று மாசடைகிறது என்பதால் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு தொழிலை நம்பி நிறைய குடும்பங்கள் இருப்பதால், அவற்றிற்கு தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது. மேலும் ஆன்லைனில் பட்டாசு விற்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
 
அதேபோல் பட்டாசு உற்பத்தியாளர்களும் குறைந்த அளவு புகை வெளியிடும் பட்டாசுகளை தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பட்டாசு உற்பத்தியாளர்களும், இதனை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments