Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் அனுமதியின்றி கருவை கலைக்க மனைவிக்கு உரிமை உண்டா? சுப்ரீம் கோர்டி அதிரடி தீர்ப்பு

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (18:14 IST)
கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண்ணுக்கு தனது வயிற்றில் சுமந்து வரும் கருவை கலைக்க அனுமதி உண்டு என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.



 
 
டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் கணவர் ஒருவர் பதிவு செய்த வழக்கில், 'தனது மனைவி தன்னிடம் அனுமதி பெறாமலேயே வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட்டார் என்றும், இதனால் ஏற்பட்ட மனவேதனைக்காக தனது மனைவியின் பெற்றோர் தனக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கணவனும் மனைவியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் பட்சத்தில், ஒரு வயது வந்த பெண்ணுக்கு தான் சுமந்து வரும் கருவை கலைக்கும் முழு உரிமை உண்டு என தீர்ப்பளித்தனர். இந்த விவகாரத்தில் பெண்ணின் பெற்றோருக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதால் அவர்கள் இழப்பீடு தரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது..!

லுங்கி கட்டிக்கொண்டு இசைக் கச்சேரிக்கு வந்த டி.எம்.கிருஷ்ணா! நிரம்பி வழிந்த மியூசிக் அகாடமி!

அரசு ஊழியர் பணி ஓய்வு விழா! கண் முன்னால் பலியான மனைவி! - அதிர்ச்சி வீடியோ!

இன்று ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments