Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணைக்காக சிபிஐயிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (20:23 IST)
பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்றும் அதேசமயம் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விசாரணைக்காக சிபிஐயிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 
முன்ஜாமீனை ரத்து செய்து, சிபிஐயிடம் சரணடையுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு, தயாநிதி மாறனுக்கு முன்ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்று கூறியது
 
அதேசமயம் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விசாரணைக்காக சிபிஐ யிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐயின் கேள்விகளுக்கு தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கலாம் என்றும் நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments