Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2015 (13:06 IST)
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
 
மலேசியாவின் வாழும் கலை அமைப்பின் அலுவலகம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் மலேசியாவில் இந்து மத செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
உடனடியாக இந்திய தூதரம் இது குறித்து மலேசிய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து மலேசிய தூதரகம் இந்த மர்மக்கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதை தொடரந்து ரவிசங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விட்டு ரவிசங்கர் நேற்று மலேசியா வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் தான் அவர் கம்போடியா சென்றார். இந்த மிரட்டல் கடிதத்தில் ஒன்று ஓட்டல் மேனேஜருக்கும் மற்றொன்று வாழுக் கலை அமைப்பின் இயக்குனருக்கும் வந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக் சென்ற ரவிசங்கர் வன்முறையை கைவிடுமாறு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments