Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சிஸ்டத்தில் தோல்வி இல்லை, மத்திய அரசுக்கு தான் தோல்வி: சோனியா காந்தி

Webdunia
சனி, 8 மே 2021 (07:36 IST)
இந்தியாவின் சிஸ்டத்தில் தோல்வி இல்லை என்றும் இந்தியாவை வழி நடத்திச் சென்று கொண்டிருக்கும் மத்திய அரசுக்குத்தான் தோல்வி என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் மத்திய அரசு கொரோனாவை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இது குறித்து கூறிய போது ’பயன்பெற தேவையற்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்றும் இதனால் இந்தியாவின் சிஸ்டம் தோல்வி அடையவில்லை என்றும், மத்திய அரசுதான் தோல்வி அடைந்துள்ளது என்றும் மத்திய அரசு மீது சோனியா காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சோனியா காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது விஜய்க்கான ஒய் பிரிவு பாதுகாப்பு.. 11 பேர் பாதுகாப்பு..!

திமுக நடத்தி வந்த நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது: வானதி சீனிவாசன்

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments