Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி என்ன பண்ணிட்டார் ன்னு அவருக்கு ஓட்டு போட்டீங்க???....காங்கிரஸ் மூத்த தலைவர் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (12:19 IST)
”வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஓட்டு மட்டும் பாஜக-விற்கா?” என காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னால் முதல்வருமான சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கும் விழாவில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சித்தராமையா பங்கேற்றார்.

அந்த விழாவில் பேசிய சித்தராமையா, தான் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்ததாகவும், ஆனால் தாங்கள் ஏன் பாஜகவிற்கு வாக்களித்தீர்கள் என்றும் மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாதாமி தொகுதியில் பாஜக, காங்கிரஸை விட 9,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றதாகவும், பிரதமர் மோடி அப்படி என்ன செய்துவிட்டார் என்று பாஜக-விற்கு வாக்களித்தீர்கள்? என்றும் அவர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ”வளர்ச்சி பணிகளை செய்வது நாங்கள், ஆனால் ஓட்டு மட்டும் பாஜக-விற்கா?” என்று கொந்தளித்து பேசினார் சித்தராமையா.

சித்தராமையவின் இந்த பேச்சிற்கு, கர்நாடகா மாநில பாஜக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments