Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் முதல்வர் பதவி?

Webdunia
புதன், 17 மே 2023 (14:10 IST)
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா  மற்றும் டி கே சிவக்குமார் ஆகிய இருவருக்கும் 2 1/2 ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி தர காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டபோதிலும் இன்னும் முதலமைச்சர் யார் என்பது காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்ய முடியாமல் உள்ளது. 
 
டி கே சிவக்குமார் மற்றும் சித்தராமையா  ஆகிய இருவருமே தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
அதன்படி கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா , எஞ்சிய இரண்டரை ஆண்டுகள் டி கே சிவக்குமாரையும் முதலமைச்சராக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments