Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முழு அடைப்பு போராட்டம்

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (06:05 IST)
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
 

 
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகின்றது.
 
இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.
 
அதன்படி, ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்தன.
 
நகரி பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆந்திர பேருந்தை தாக்கினர். இதனால், ஆந்திரா செல்லும் தமிழக பேருந்துகள் 
தமிழக எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
 
இந்தப் போராட்டம் காரணமாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும், பாதுகாப்பு காரணம் கருதி பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. பின்பு, வழக்கம் போல் இங்கியது. 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments